Advertisement

Responsive Advertisement

50 க்கு மேற்பட்ட பயணிகள் மற்றும் விமானக் குழவினருடன் காணாமல் போன பயணிகள் விமானம்!!


இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானமொன்று காணாமல் போயுள்ளது.


Boeing 737 ரகத்தைச் சேர்ந்த The Sriwijaya Air எனும் பயணிகள் விமானமொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் அடிக்கும் குறைவான உயரத்தில் பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக, Flightradar24.com இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விமானத்தில் 50 க்கு மேற்பட்ட பயணிகள் மற்றும் விமானக் குழவினர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேஷிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments