Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆறு நாட்களில் 30 பேர் பலி- இலங்கையை ஆட்டம் காண வைக்கும் விபத்துக்கள்!!


நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் இதன்போது 189 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்துக்களின்போது 119 வாகனங்கள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே சிக்குண்டவர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவ‍ேளை கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வீதி விபத்துக்களில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகக்கது.

Post a Comment

0 Comments