Home » » வருகின்ற 28ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்..!!

வருகின்ற 28ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்..!!


 சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


களுத்துறையில் கிராமத்துடன் கலந்துரையாடல்´ நிகழ்ச்சித் திட்டத்தின் 7வது வேலைத்திட்டத்தில் நேற்று பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகமாக இந்தியாவிடம் இருந்து குறித்த 6 இலட்சம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து கொவிட் தடுப்பூசிகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |