எஸ்.எம்.எம்.முர்ஷித்2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
அந்தவகையில் தரம் 02 முதல் தரம் 13 வரையான வகுப்பு கல்விச் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சில தாழ் நிலப் பிரதேசங்கள் மற்றும் சில பாடசாலைகளில் வெள்ள நீர் அதிகம் காணப்படுவதுடன், பல வீட்டு வளாகமும் வெள்ள நீரில் காணப்படுகின்றது.
இதன் காரணமாக பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுகின்றது. அத்தோடு நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது குறைவாகவே காணப்படுகின்றது.
ஆனால் இன்றயை தினம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள் என்பன சுகாதார முறையை பேணி இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
0 Comments