Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கனமழை பதிவு ! 24 மணி நேரத்தில் 142.6 மில்லி மீற்றர் மழை


  (ரீ.எல்.ஜவ்பர்கான் )

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை  பெய்த இடைவிடாத  கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 142.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் எம்.ரமேஸ் தெரிவித்தார். 

இது இலங்கையில் 24 மணிநேரத்தில் பெய்த அதிக மழை வீழ்ச்சியாகும்.

கடும் மழை காரணமாக மாவட்டத்தில் காத்தான்குடி மண்முனை வடக்கு ஆரையம்பதி கிரான் உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்கு வரத்து தடைப்பாட்டுள்ளது. பாரிய இடி மின்னலால் பல குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன.

வெள்ளம் காரணாமாக ப குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர் நண்பர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளன.

Post a Comment

0 Comments