Home » » நிந்தவூர் பிரதேச கொவிட்- 19 மற்றும் டெங்கு தடுப்புசெயலணிக் குழுக்கூட்டம்.

நிந்தவூர் பிரதேச கொவிட்- 19 மற்றும் டெங்கு தடுப்புசெயலணிக் குழுக்கூட்டம்.



நூருல் ஹுதா உமர்

கொவிட் 19 மற்றும் டெங்கு பாதுகாப்பு தொடர்பான பிரதேச செயற்குழு கூட்டம்  நேற்று (20) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ காதர் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

எமது பிராந்தியத்தில் உள்ள இரு முக்கிய பிரச்சினைகளாக கொவிட்-19 மற்றும் டெங்குவும் காணப்படுகிறது. கொவிட் மரணங்களை தடுக்கமுகமாக மக்களுக்கு சுகாதார வழிமுறைகளை மீளவும் அறிவுறுத்தல் வேண்டும் எனவும் கொவிட்-19 மற்றும் டெங்குவினை ஒழிக்க பிரதேச மட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் என இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களை டெங்கு மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு மாதங்களாக கருத்திற்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்,
அனைத்து பாடசாலைகளிலிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதலோடு, ஆசிரியர்கள் முகக்கவசம் (Face Shield) அணிதலை ஊக்கப்படுத்தலும். கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களின் முறையான கண்காணிப்புக்குட்படுத்தலும், முகக்கவசமின்றி வீதியில் நடமாடுபவர்கள் இனங்கண்டு பொலிசாரினால் சட்ட நடவடிக்கை எடுத்தல், சந்தை வியாபாரிகள் வியாபார நேரத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதோடு முகக்கவசம் (Face Shield) அணிந்திருத்தலும் அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.

பொலிஸ் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கண்காணித்தலும் ஊக்குவித்தலும், தொழுகை வேளைகளில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சுகாதார நடவடிக்கைகள் பொறுப்புதாரியாக இருத்தலும், பள்ளிவாசல்களில் கொவிட் 19, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து தினமும் ஒரு வேளை ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தல் என்றும்  நிந்தவூர்-21 ஆம் பிரிவின் டெங்கு கட்டுப்பாடுக்காக இன்றிலிருந்து பெப்ரவரி மாதம் கடைசி வரை  USSO சமூக வேவை அமைப்பிடம் பொறுப்புக் கொடுத்தல், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்  பிரிவில் உள்ள கிராமிய குழுக்களை அந்தந்த பிரிவில் கொவிட் 19 ,டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தல், பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் வாராந்தம் டெங்கழிப்பு  மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ .எம்.எம்.அன்சார், நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாசல் பிரிநிதிகள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதிநிதி, கோவில் பிரதிநிதிகள் மற்றும் நிந்தவூர் அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளத்தின் தலைவர் மற்றும் சமூக நல அமைப்புக்களின்  பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |