Home » » கல்முனையில் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் அன்பளிப்பு

கல்முனையில் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் அன்பளிப்பு

 


செ.துஜியந்தன்

கல்முனை சேனைக்குடியிருப்பு சேவோ அமைப்பின் ஒழுங்கமைப்பில் யாழ் இந்துக் கல்லூரியின் 78 ஆம், 82 ஆம் ஆண்டுகளில் டி வகுப்பில்  கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரரீதியில் வசதி குறைந்த தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு பொங்கலைக் கொண்டாடுவதற்கான ஆடை மற்றும் உலர் உணவுப்பொருட்கள், பொங்கல் பானை ஆகியவ்றறை வழங்கி வைத்துள்ளனர்.

இந்நிகழ்வு  சேவோ நிறுவனத்தின் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டார். அத்துடன் சிறப்பு அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டதுடன் கல்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாஸ், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சிவகுமார், ஓய்வு நிலை அதிபர் கே.சந்திரலிங்கம், சேனைக்குடியிருப்பு  அனைத்து ஆலயங்களின் தலைவர் மனோகரன் பிரதெச பொதுச்சுகாதாரப் பரிசோதகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





சுகாதாரவிதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற நிகழ்வில் கல்முனை வடக்கு, நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த குடும்பங்கள் பயனாளிகளா கலந்து கொண்டனர். இங்கு க.பொ.த உயர்தரப்பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போக்குவரத்து வசதியற்ற தூர இடங்களில் இருந்து நகர்ப்பகுதிக்கு  வருகை தரும் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |