ஹட்டன் வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் பாடசாலையில் 9வது வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 28ஆம் 30ஆம் திகதிகளில் பாடசாலை கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் முடிவாக கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
0 comments: