Home » » இலங்கையில் கொரோனா தொற்று அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடம் வெளியானது..!!

இலங்கையில் கொரோனா தொற்று அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடம் வெளியானது..!!


இலங்கையில் கொரோனா தொற்று அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.


இதன்படி, அதிக ஆபத்துள்ள பகுதியை அடையாளப்படுத்தும் சிவப்பு நிறம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதை காணமுடிந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்துடன், ஒப்பிடும் போது இலங்கையில் அபாய வலயங்களாக காணப்படும் பகுதிகளின் அளவு அதிகமாக உள்ளதை காணமுடிந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலும் இலங்கையில் கொரோனா தொடர்பான 187ஆவது மரணம் நேற்றைய தினம் பதிவாயிகிருந்தது.

கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |