Home » » புது வருட கொண்டாட்டம் தொடர்பில் பிரதி காவல் துறை மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!!

புது வருட கொண்டாட்டம் தொடர்பில் பிரதி காவல் துறை மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!!

 


மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அடுத்து மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களிடம் கொவிட் 19 தொற்று காணப்படலாம் என்ற சந்தேகத்தில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 18 ஆம் திகதியிலிருந்து மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு 11 இடங்களில் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் புதுவருட கொண்டாட்டங்களை தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்படும் ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியான 54 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் 8 ஆயிரத்து 600 பேருக்கு ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஆயிரத்து 100 பேருக்கு ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் கொவிட்-19 தொற்றுறுதியான 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் மேல்மாகாணத்தில் வெளியேறும் பகுதிகளில் தொடர்ந்தும் ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |