Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால்......கூட்டமைப்பை தடைசெய்வோம்! பகிரங்க எச்சரிக்கை


 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் மீளுருவாகினால் அதற்கான பொறுப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

போல்பொட், ஹிட்லர் உட்பட சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்தியவர்களின் தலைவர்களது கட்சிகள் முடக்கப்பட்டன.

ஆனால் விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை இதுவரை தடைசெய்யப்படவில்லை.

இதற்கு யுத்தம் முடிந்த பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய கருணையே காரணம் என்றார்.


Post a Comment

0 Comments