Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு ஊரடங்குச் சட்டமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

 


நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தென்னிலங்கை ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர் நாட்டை முடக்குவதற்கான தேவை ஏற்படவில்லை எனவும், குறித்த தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் அறிவித்தார்.

எந்த வித புதிய திட்டங்களும் இதுவரை வகுக்கப்படவில்லை எனவும் இதுவரை தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments