சர்வதேச பயணங்களுக்காக இலங்கை விமான நிலையங்களை டிசம்பர் 26 முதல் மீண்டும் திறப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் உள்ள காட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களில் வணிக விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.
இதில் பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பின்னர் வழங்கப்படும்.
மேலும் சர்வதேச விமானங்களுக்குக்கான பயண விபரங்களும்,
அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments: