Home » » சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்


 சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவர் அருளால் இன்பம் பொங்கும்; 3 நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை ‘பொங்கும்’ சனியாகவே அருள்வார்.

நிகழும் சார்வரி வருடம் மார்கழி 11-ம் நாள் (26.12.2020) சனிக்கிழமை இரவு 4:49 மணிக்கு (விடிந்தால் 27.12.2020) உத்திராடம் நட்சத்திரம் 2-ம் பாதம் - மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).

இந்தப் பெயர்ச்சியில் பன்னிரு ராசிகளுக்கும் அவர் அருளப்போகும் பலாபலன்கள் இந்த இதழில் உங்களுக்காக!

மேஷம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

செயலில் அதிக ஆர்வம் காட்டி வெற்றி, வாகை சூடுபவர் நீங்கள். சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வ தால் யோக பலன்களையே தருவார்.

உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப் படும். தந்தையுடன் சுமூகமான உறவு தொடரும். அவரின் உடல் நலன் முன்னேறும். தொட்டது துலங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் பிரச்னை கள் தீரும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பல சிக்கல்கள் இனி முடிவுக்கு வரும். இழந்த பணமெல்லாம் கைக்கு வரும்.

வீட்டைக் கட்டி முடிக்க, எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். அரசு விஷயங்கள் சாதகமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 11-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு உண்டு..

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்ப தால், தாயாரின் உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மனைவிக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, அவருடன் வீண் வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனி பகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால், சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலக் கட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும். அரசு விவகாரங்கள், வரிகள் செலுத்து வதில் கவனம் தேவை.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால், சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், மனக்குழப்பங்கள், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

உங்களின் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் வேகமாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால், தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு உற்சாகம் பிறக்கும். எதிர் காலம் குறித்த கவலைகள் விலகும். அலுவலகம் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு வாய்க்கும்.

வியாபாரிகள் போட்டிகளை முறியடிப்பார்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுப்படுத்துவர். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பரம் செய்வார்கள். கண்ணாடி, துணி, பெட்ரோல், டீசல் மற்றும் கட்டுமானப் பொருட்களால் லாபமடைவார்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே, ராசிக்கு 10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகம் உண்டு. முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப் படுவீர்கள். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகை களும் சம்பள உயர்வும் உண்டு. வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வளைதலங்களில் அதிகாரிகள் மற்றும் அலுவலக விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பரிகாரம்: தினமும் கோளறு பதிகம் படித்து வழிபடவும். அருகிலுள்ள சிவாலயங்களில் அருளும் சனி பகவானுக்கு எள்முடிச்சு தீபம் ஏற்றி வழிபடவும்; கிரக பாதிப்புகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

பெருந்தன்மையுடன் நடந்து கொள்பவர் நீங்கள். சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார். சகோதர - சகோதரிகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

தன்மானத்துடன் கம்பீரமாகச் செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். இனி, மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நிரந்தமான வேலை கிடைக்கும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். மகளை அயல்நாடு அனுப்பி படிக்கவைப்பீர்கள். சொந்த வீடு கனவு நிஜமாகும்.

வெளிவட்டாரத்தில் உங்கள் கை ஓங்கும். இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அநாவசியச் செலவுகள் வந்து நீங்கும். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 10-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், இக்காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் வேலைச்சுமை, ஏமாற்றம் வந்துபோகும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படுவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும். சனி பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால், இக்காலக் கட்டத்தில் அரைகுறையாக நின்ற கட்டட வேலைகள் முழுமையடையும். கடன் தீரும்.

11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். இரவு நேர பயணங் களைத் தவிர்க்கவும். உங்களின் தைரிய ஸ்தானாதி பதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், சில காரியங்களில் ஏமாற்றமும், வீண் அலைச்சலும், காரியத்தடைகளும் வந்துபோகும்.

உங்களின் சப்தம-விரயஸ்தானாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

இல்லத்தரசிகளே! அஷ்டமத்துச் சனி விலகுவ தால் உங்களின் மனக்கவலைகள் யாவும் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பதவி-சம்பள உயர்வு உண்டு. பணியில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும்.

வியாபாரிகளுக்குக் கடன் பிரச்னைகள் மெள்ள விலகும். ஆதாயம் கிடைக்கும். நல்ல அனுபவம் மிக்க வேலையாள்கள் வாய்ப்பார்கள். ஹோட்டல், ஏற்றுமதி-இறக்குமதி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் பங்குதாரர்களாக வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு, இழந்த வேலை கிடைக்க நீதிமன்ற ஆணை கிடைக்கும். சிலர் உயர்மட்ட கமிட்டியில் இடம்பிடிப்பார்கள். அரசுப் பணியாளர்கள் மீதான வீண்பழி நீங்கும். மேல் அதிகாரியின் கோபம் தணியும். சிலருக்குச் சொந்த ஊருக்கே இடமாறுதல் கிடைக்கும். கணினித் துறையினருக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சி உங்க ளுக்கு அதிகாரத்தை அளிப்பதாக அமையும்.

பரிகாரம்: பிள்ளையார் பெருமானை சிக்கென்று பிடித்துக்கொள்ளுங்கள். சதுர்த்தி தினங்களில் அவரை தரிசிப்பதும் வழிபடுவதும் நன்று. இயன்றால் ஒருமுறை திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும் சனிபகவானையும் தரிசித்து வாருங்கள்; இன்னல்கள், தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

திநுட்பம் மிகுந்தவர் நீங்கள். சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வங்கிக் காசோலைகளைக் கவனமாகக் கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுக்கவும். மகளின் திருமணத்திற்காகக் கடன் வாங்க வேண்டி வரும்.

மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர்ப் பயணங்களும் அலைச்சலும் உண்டு. கர்ப்பிணிகள், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். மெடிக்ளைம் எடுத்துக்கொள்ளுங்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 9-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், இக்காலக்கட்டத்தில் பிரச்சனைகள் விலகும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி சிக்கிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனி பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் ஏதோ சதி நடப்பதாக சிலரைச் சந்தேகப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழி அன்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பணம் வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், இக்காலகட்டத்தில் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் மற்றும் வீண் செலவுகள் வந்து நீங்கும்.

உங்களின் தனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். உங்களிடம் பணம் பெற்று ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு வந்து நீங்கும்.

உங்களின் ரோக-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால் நிலம் வாங்கும் யோகம் உண்டு. என்றாலும் ரத்த சோகை, ரத்த அழுத்தம் வரக்கூடும். வாகன பயணத்தில் கவனம் தேவை. மூத்த சகோதரருடன் மோதல் வேண்டாம். 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரமடைவதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள்.

இல்லத்தரசிகளே! குடும்பத்தில் பெரிய முடிவெல்லாம் நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்குப் பேச்சில் கவனம் தேவை. சம்பளம் உயரும்.

வியாபாரிகள் ஆழம் தெரிந்து கால் வைக்க வேண்டும். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். அரசு விஷயங் களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பங்குதாரர் களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும்.

உத்தியோகஸ்தர்களே, நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடி களைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். கணினித் துறையினருக்குப் புது வாய்ப்பு களும் பொறுப்புகளும் தாமதமாகிக் கிடைக்கும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மைகளை அளிக்கும். சனைச்சர ஸ்தோத்திரங்களைப் படித்து அவரை வழிபடுங்கள். தினமும் காகத்துக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களின் பிரச்னைகள் நீங்கி, வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

யராத உழைப்பாளி நீங்கள். சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, 7-ம் வீட்டில் அமர்கிறார். நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்வதால், குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்தாலும் பெரிதாக பாதிக்காது.

கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் குழப்பம் ஏற்படுத்தலாம். விலை உயர்ந்த நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். வரி கட்டுவதில் தாமதம் வேண்டாம். வங்கிக் காசோலைகள், ஆவணங்களில் கையெழுத்து இடுவதில் கவனம் தேவை.

மனைவிக்கு ஆரோக்கியம் பாதிக்கும். மகனின் உயர்கல்விக்காகச் சிலரின் சிபாரியை நாட வேண்டியிருக்கும். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டி வரும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரபலங்கள், வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை, சனி அதிசாரத்தில் 8-ம் வீடான கும்ப ராசியில் அமர்வதால், இனந்தெரியாத கவலை, பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும்.

சனி பகவானின் பார்வை...

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டிகல் வரவும், முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். உணவில் உப்பு, புளி, காரம் அதிகம் வேண்டாம். மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனி பகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் கையிருப்புகள் கரையும்; வெளியில் கடன் வாங்க நேரிடும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் தன ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பிரபலங்கள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் பணத்தட்டுபாடு, வீண் பகை, அரசு விஷயங்களில் இழுபறி நிலை உண்டாகும்.

உங்கள் ராசிநாதனான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால் திடீர் யோகம், பண வரவு, அரசு மரியாதை, வீடு, மனை வாங்குதல் போன்றவை தேடி வரும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் ஏமாற்றங்கள், இழப்புகள், மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால், சுபகாரியம், பிள்ளைகளால் பெருமை, சமூகத்தில் அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவி உயர்வு ஆகியவை உண்டாகும். 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி வக்ரத்தில் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள்.

இல்லத்தரசிகளே! கணவரின் சின்னச் சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், சக ஊழியர்களை விமர்சித்துப் பேசவேண்டாம்.

வியாபாரிகள், கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்தவோ, கூட்டுத் தொழிலில் ஈடுபடுதலோ வேண்டாம். வேலையாள்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களைப் பகிரவேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். கடன் தருவதைத் தவிருங்கள். அரிசி-பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். பங்குதாரர்களுடன் மோதல்கள் எழும்.

உத்தியோகஸ்தர்களே, அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலதிகாரி களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். கணினித் துறையினருக்குப் பிரச்னை களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும்.

பரிகாரம்: வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாடி அம்பாளை வழிபடுங்கள். நவகிரகச் சந்நிதியில் வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

னத் தூய்மை மிக்கவர் நீங்கள். பல வகைகளில் உங்களை வாட்டியெடுத்த சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 6-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே, விபரீத ராஜ யோகத்தை அள்ளித் தருவார்.

மனஇறுக்கமும் கோபமும் விலகும். தடுமாற்றம் நீங்கும். நல்ல வாய்ப்புகள் அமையும். பக்குவமாகப் பேசி பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். உங்கள் முகம் இனி தெளிவடையும். பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பிள்ளைகள் இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை அலட்சியப்படுத்திய சொந்தபந்தங்கள், நண்பர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள். சிலர், சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். மகனுக்குத் தெரிந்த இடத்தில் சம்பந்தம் அமையும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 7-ம் வீடான கும்பத்தில் சென்று அமர்வதால் எதிலும் தடுமாற்றமும் வீண் செலவுகளும் வந்துபோகும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். குடலுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனங் களை இயக்கும்போது கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனி பகவான் செல்வதால், இக்காலகட்டத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் வீழ்வார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துச் சிக்கல்கள் தீரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், நெஞ்சு வலி, முதுகுத் தண்டில் வலி வரக் கூடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம்.

உங்களின் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் பணத்தட்டுபாடு, ஏமாற்றம், துரோகங்களைச் சந்திக்க நேரிடும்.

உங்களின் சுக-பாக்கியாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகங்கள், சொத்துச் சேர்க்கை உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும்.

இல்லத்தரசிகளே! தாம்பத்தியம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அலுவலகம் செல்லும் பெண்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

வியாபாரிகளுக்கு அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள். சரக்குகள் விற்றுத் தீரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. வெகுநாட்களாக போராடிய சம்பள பாக்கியும் கைக்கு வரும். மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பத்துடன் வாய்ப்பு கிடைக்கும். இந்த சனிப் பெயர்ச்சி திடீர் யோகங்களை அளிக்கும்.

பரிகாரம்: சிவ தரிசனம் நன்மை சேர்க்கும். திருவாரூர் அருகில், காரையூரில் - சங்கரநாராயணர் கோயிலில் அருளும் சனி பகவானை தரிசித்து வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.

கன்னி

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

ளிமையில் அதிக மகிழ்ச்சி காண்பவர் நீங்கள். சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள கால கட்டங்களில் உங்கள் ராசிக்கு 5- ம் வீடான பூர்வபுண்ணியஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் நல்லதே நடக்கும். சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

ஏமாற்றங்கள் நீங்கும். தாயாருக்கான மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். தாயாருடன் பாசமாக நடந்துகொள்வீர்கள். வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். கோலாகலமாகக் கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பிணிகள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் தோழமையாகப் பழகுங்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 6-ம் வீடான கும்பத்தில் அமர்வதால், எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டாகும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால், இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனி பகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்குக் கை, கால் வலி, மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனி பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், நெடுநாள் களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் பாசமாக நடந்து கொள்வர். மார்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனி பகவான் செல்வதால், இக்காலகட்டத்தில் காரியத்தடையும் அலைச்

சலும் இருக்கும். உத்திரம் நட்சத்திக்காரர்களின் உடல்நலன் பாதிக்கும். 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வ தால் எதிர்பாராத வகையில் பணம் வரும். திடீர் யோகம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் வசதி வாய்ப்புகள் பெருகும். ஆனால் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண்பழி, விபத்து, இழப்பு, உடல்நலக் குறைபாடுகள் வந்து போகும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், பணம் வாங்கி ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள்.

உங்களின் திருதிய, அட்டமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால் நெருங்கிய உறவினர், நண்பர்களின் இழப்பைச் சந்திக்க நேரிடும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் வரும். உடன்பிறந்தவர்களுக்கிடையே கருத்துமோதல்கள் அதிகரிக்கும். 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி வக்ரமடைவதால் பழையப் பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள்.

இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அலுவலகம் செல்லும் பெண்கள், வேலைச் சுமை, மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரிகளே பண வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாள்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு கொள்முதல் செய்யப்பாருங்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுக மாவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். துறை மாறிப் பணியாற்றியவர்களுக்குப் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி செல்வாக்கு தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்திதேவருக்குக் காப்பரிசி சமர்ப்பித்து வழிபடுங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி, முன்னேற்றம் புலப்படும்.

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

நியாயங்களைத் தட்டிக் கேட்பவர் நீங்கள். சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் இருக்கும். எதையும் சமாளிக் கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.

சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவதும் கட்டுவதும் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். சொத்து வாங்கும்போது, தாய்ப் பத்திரத்தைச் சரி பார்ப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். தாய்வழிச் சொத்துக்களில் சிக்கல்கள் எழலாம்.

அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 5-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் எதிலும் கவனத்துடன் செயல்படவும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால், தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்துமோதல்கள் வரும். பாகப் பிரிவினையால் பிரச்சனைகள் வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் நன்மை பிறக்கும். உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், அலுவலகத்தில் சிறு பிரச்னைகள், உறவினர்களின் இழப்பு வரக்கூடும்.

உங்களின் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால், வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் உண்டு. சொத்துச் சேர்க்கையுண்டு. சகோதரர் வலிய வந்து பேசுவார். 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் வாழ்க்கைத் துணைவருடன் மோதல்கள் அதிகரிக்கும். செலவினங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

இல்லத்தரசிகளே! உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடக்காதீர்கள். நகை சேரும். அலுவலகம் செல்லும் பெண்களே, சக ஊழியர்களில் நல்லவர் கள் யார் என்பதை உணர்வீர்கள்.

வியாபாரிகளுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனங் கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். பங்கு தாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவர். எலெக்ட்ரானிக்ஸ், கணினி, மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சி யம் காட்டாதீர்கள். மேலதிகாரிகளுடன் பிரச்னை வேண்டாம். அலுவல ரகசியங்களை வெளியிட வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். சிலர், உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்குப் பார்வைக் கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதால் பன்மடங்கு பலன் கிடைக்கும். ஏழைப் பெண்களின் திருமணத்துக்குப் பொரு ளாதார உதவி செய்யுங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

விருச்சிகம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

டுத்தவரை வாழவைத்து மகிழ்பவர் நீங்கள். சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 3-ம் வீட்டில் அமர்வதால், தொட்ட தெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள்.

தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். ஆரோக்கியம் அடைவீர்கள். மனத்தைப் பக்குவப் படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். அழகிய வாரிசு உருவாகும். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். கடன் உதவியுடன் வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். எதிலும் கறாராக இருப்பீர்கள். வழக்கில் இனி வெற்றிதான். எல்லோரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 4-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். சனி பகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் தசம ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால், எதிலும் வெற்றி உண்டு. சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. நல்ல தீர்ப்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால், ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்கவேண்டி வரும். டென்ஷன், மன உளைச்சல், மறைமுக பகைகள் அதிகரிக்கும்.

உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டு. பொன் பொருள் சேரும். பிதுர் வழிச் சொத்துகள் வந்து சேரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் தந்தை யுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். வீண் செலவுகள், காரியத்தடைகள் வந்து நீங்கும்.

உங்கள் ராசிநாதான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால் அழகு அறிவு கூடும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் திடீர்ப் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்சனைகள் வந்துசெல்லும்.

இல்லத்தரசிகளுக்கு உடல் ஆரோக்யம் மேம்படும். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், விமர்சித்தவர்களும் வியக்கும்படி காரியம் சாதிப்பீர்கள்; சம்பளம் உயரும்.

வியாபாரிகள், கடையை நவீனமயமாக்கு வார்கள். அனுபமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர், அயல்நாட்டு தொடர்புடன் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர் களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும்.

உத்யோகஸ்தர்களே! பிரச்சனை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு.

பரிகாரம்: அருகிலுள்ள அனுமன் ஆலயங் களுக்குச் சென்று அனுதினமும் வழிபடுங்கள். கோயில் பணிகளுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்; தடைகள் நீங்கும்.

தனுசு

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மனசாட்சிக்கு மதிப்பளித்து வாழ்பவர் நீங்கள்.சனி 27.12.2020 முதல் 19.12.2023 வரை, உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

பணப் பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். எதிர்மறை எண்ணங்கள் மறையும். பயம் விலகும். உடல் நிலை சீராகும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவை. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். வாழ்க் கைத் துணைவர் கவலைகள் நீங்கி உற்சாகம் அடைவார். என்றாலும் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும்; விட்டுக்கொடுத்து போவது நல்லது. வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். அடுத்தவர் விவகாரங் களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 3-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், இக்காலகட்டத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரத்தும் யோக பலன்களும் அதிகரிக்கும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்ப தால் வேலைச்சுமை, காரியங்களில் போராட்டம் இருக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சனி பகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் மனத்தை வாட்டும். உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை கிட்டும். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் பழைய வழக்குகள், பொருள் இழப்புகள் வரக்கூடும்.

உங்களின் அட்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால் பணத்தட்டுபாடு, காரியத்தடை, திடீர்ப் பயணங்கள் வந்து நீங்கும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் திடீர் யோகம், எதிர்பாராத உதவி, பண வரவு எல்லாம் உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் கிட்டும்.

உங்களின் பூர்வபுண்ய-விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய சொத்துச் சேர்க்கையுண்டு. இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால், பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

இல்லத்தரசிகளே! கணவரின் வருமானம் உயரும். அவரின் அன்பு அதிகரிக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு வேலைச் சுமை குறையும். சம்பளம் உயரும்.

வியாபாரிகள், போட்டியாளர்களைத் திணறச் செய்வார்கள். புது அணுகுமுறையை வெளிப் படுத்துவார்கள். புதிய முதலீடுகள் செய்வார்கள். விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவு படுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவு விடுதி, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாகும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு, வெளி மாநிலம்- வெளிநாடுகளில் ஒப்பந்த முறையில் பணி புரிய வாய்ப்புகள் வரும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக் காடு தலத்தில் அருளும் பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை வழிபட்டு வாருங்கள்; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்; துன்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

மகரம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மற்றவரை மதித்துப் போற்றும் பண்பாளர் நீங்கள்.சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை ஜன்மச் சனியாக அமர்கிறார். `ஜன்மச் சனி’ என்று கலக்கம் வேண்டாம்.

உங்களின் ராசிநாதனான சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வ தால், அனைத்து வசதிகளையும் அள்ளித்தருவார். பண வரவையும் அதிகரிப்பார். இனி வெளிச்சத் திற்கு வருவீர்கள்; நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜன்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவிலும் கவனம் தேவை. அதிக நீர் பருகுங்கள்.

உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர்ப் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வங்கிக் கடன் உதவியுடன் வீடு கட்டும் பணியை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். மகளுக்குக் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனின் கூடாநட்பு விலகும். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 2-ம் வீடான கும்ப ராசியில் சென்று பாதச்சனியாக அமர்வதால், இக்காலகட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சனி பகவான் உங்களின் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனி பகவான் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் தேடி வரும். முடங்கிக் கிடந்த சில பணிகள் இனி முழுமையடையும். சொத்து வழக்கு சாதகமாக முடியும். 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால், வாகனத் தைக் கவனமாக இயக்குங்கள். மனஉளைச்சல்கள், வீண்பழி வந்து நீங்கும்.

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மனைவி, பிள்ளைகளுக்குத் தங்க ஆபரணம், ரத்தினம், ஆடைகளை வாங்கித் தருவீர்கள். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் வாழ்க்கைத் துணைவர் வழியில் வீண் அலைச்சல், செலவுகள் வந்து போகும்.

உங்களின் சுக- லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால், கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். சொந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.

இல்லத்தரசிகளே, சேமித்த பணத்தைக் கொண்டு ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாமியார், மாமனாருடன் மனஸ்தாபம் குறையும். அலுவலகம் செல்லும் பெண்களுக்குப் பணிச்சுமை குறையும்.

வியாபாரிகள் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வார்கள். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. சிலர், தவறான ஆலோசனை களை வழங்கக்கூடும். கணிசமாக லாபம் உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கி களைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். பங்குதாரர் களிடம் வளைந்துகொடுத்து போங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகரிக்கும். பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடும்போது உஷாராக இருங்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கணினித் துறையினருக்கு வேலை அதிகரிக்கும்.

பரிகாரம்: இஷ்ட தெய்வங்களை வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும். சனிக்கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடுங்கள்; பாதிப்புகள் அகன்று; மகிழ்ச்சி பெருகும்.

கும்பம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

இயல்பை எப்போதும் மாற்றிக் கொள்ளாதவர் நீங்கள்.சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதன் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வதால், தடைப்பட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிமீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால், கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களை, இரவல் வாங்குவதோ, கொடுப்பதோ வேண்டாம்.மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கா தீர்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுமுன் வழக்கறிஞரை ஆலோசிப்பது நல்லது. 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஜன்மச் சனியாக அமர்வதால் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும்.

சனி பகவானின் பார்வை...

சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்ப

தால், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் துரத்தும். கொடுத்த வாக்கைக் காப்பற்ற போராட வேண்டியது இருக்கும். சனி உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை-கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். செல்வாக்கு உயரும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனி பகவான் செல்வதால், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மாமியார், நாத்தனாரின் ஆதரவு பெருகும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவர் வழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால், தந்தையுடன் கருத்து மோதல்கள் வரும். அவரின் உடல்நலனில் கவனம் தேவை.

உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத் திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனி பகவான் செல்வதால் அடிவயிற்றில்வலி, அலர்ஜி, சளித் தொந்தரவு மற்றும் கடன் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை வக்ரத்தில் செல்வதால் பூர்வீகச் சொத்து வழக்கில் வெற்றி, திடீர் பணவரவு உண்டு.

உங்களின் திருதிய-ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். 27.06.2023 முதல் 23.10.2023 வரை, சனி பகவான் வக்ரம் அடைவதால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும்.

இல்லத்தரசிகளே, அடகில் வைத்த நகைகளை மீட்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஆரோக்கியம் கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்.

உத்தியோகஸ்தர்களே, சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. கணினித் துறையினருக்குப் பதவி - சம்பள உயர்வுகள் தடைப்பட்டாலும், அவற்றைப் போராடி பெறுவீர்கள்.

பரிகாரம்: அனுமன் வழிபாடும் விநாயகர் வழிபாடும் சிறந்த பலன்களைத் தரும். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்; தடங்கல்கள் நீங்கும்; வீட்டில் மங்கலச் சூழல் நிறையும்.

மீனம்

சனிப் பெயர்ச்சி ராசிபலன்கள்! - துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

ம்பிக்கையைக் காப்பவர் நீங்கள். சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். எடுத்த வேலையைத் திறம்பட முடிப்பீர்கள்.

சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத் தெளிவு அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பண வரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்கும் எண்ணமும் ஏற்படும். பெரிய அந்தஸ்தில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர் கள். பிள்ளை இல்லாமல் தவித்த தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.

பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க புது வழி பிறக்கும். சகோதரிக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 12-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும்.

சனி பகவானின் பார்வை...

சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனி பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். சனி பகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனி பகவான் செல்வதால், காரியத்தடை, வீண் பகை, அலைச்சல், பணப் பற்றாக்குறை, நெஞ்சுவலி வந்து போகும். 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், அக்காலகட்டத்தில் சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். உங்களின் பூர்வ புண்யாதிபதி யான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனி பகவான் வக்கிரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், தர்ம சங்கடம், சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.

உங்களின் தன-பாக்கியாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரமடைவதால் சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணத் தால் அடிவயிற்றில் வலி வந்துசெல்லும்.

இல்லத்தரசிகளுக்கு ஆடை அணிகலன் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். அலுவலகம் செல்லும் பெண்களே, தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத் துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும்.

வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உந்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். கணினித் துறையினரே! பணி செய்யும் நிறுவனத் திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

பரிகாரம்: மகான்களின் அதிஷ்டானங்களை தரிசித்து வாருங்கள். உழவாரப் பணிகளில் பங்களிப்பு செய்யுங்கள்; சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்; சந்தோஷம் உண்டாகும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |