Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

12 வருடங்களுக்கு பின் சிறையிலிருந்து விடுதலையானவுடன் தம்பியை கொலை செய்த அண்ணன்..!!

 


கொலைக் குற்றச்சாட்டில் 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவர் விடுதலையான சில நாட்களிலேயே சொந்தச் சகோதாரனைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறை சென்றுள்ளார்.


அநுராதபுரம் - தம்புத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 12 வருடங்கள் சிறையில் இருந்த 53 வயதான நபர் கடந்த நவம்பர் 30 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

டிசம்பர் 8 ஆம் திகதி அவர் 37 வயதான தனது சொந்தச் சகோதரனைக் கொலை செய்தாா்.

வாக்குவாதம் ஒன்றை அடுத்து இரும்புக் குழாய் ஒன்றால் சகோதரனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கொலை இடம்பெற்ற அதே நாளிலேயே குற்றவாளி தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து மீண்டும் சிறை சென்றுள்ளார்.

Post a Comment

0 Comments