ஜப்பானியச் சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீர்கொழும்பு - கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும், சிறுவர் துஷ்பியோக குற்றச்சாட்டின் கீழ் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்ய கொழும்பிலுள்ள ஜப்பான் நாட்டுத் தூதரகம் உதவி புரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் சந்தேக நபர் அழைத்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சிறுமியின் தாயாரினால் இலங்கை பொலிஸில் தனது மகள் காணாமல் போயிருப்பதாகவும், வீட்டில் தொழில் செய்த இலங்கை இளைஞனே சந்தேக நபராகவும் குறிப்பிட்டு முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில் 24 வயதான சிலாபம் கொச்சிக்கடையைச் சேர்ந்த இளைஞனும், குறித்த ஜப்பான் சிறுமியும் இளைஞனின் உறவினரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இருப்பினும் தற்போது குறித்த ஜப்பான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: