Home » » பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

 


ஒற்றைப் பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யுமாறு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுற்றாடல் உணர்திறன் முறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதனை தடை செய்யுமாறு முன்மொழிந்துள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாசித்து நிறைவு செய்தவுடன், பாராளுமன்றம் நாளை(18) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |