Advertisement

Responsive Advertisement

கொரோனா அச்சம் காரணமாக மட்டக்களப்பு- ஏறாவூர் பொதுச் சந்தை மூடப்பட்டது!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாகரனின் அறிவுறுத்தலுக்கமைய ஏறாவூர் புன்னைக்குடாவீதியிலுள்ள ஏறாவூர் பொதுச் சந்தை வியாழக்கிழமை 05.11.2020 உடனடியாக மூடப்பட்டது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் உள்ள மிச்நகர் கிராமத்தில் வியாழக்கிழமை முதன் முதலாக மீன் வியாபாரி ஒருவர் கொரோளா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.

இதற்கும் மேலதிகமாக ஏறாவூர் பொதுச் சந்தை வளாகத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நீக்கி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டதோடு மேற்படி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அனைத்து சந்தை வியாபாரிகளும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே ஏறாவூர் நகர பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கையை இறுக்கமாக்கும் பல தீர்மானங்கள் வியாழக்கிழமை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் உயர் மட்டக் கூட்டத்தில் எட்டப்பட்டதாக நகர சபைத் தலைவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments