இலங்கையில் முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி. முன்பள்ளி மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதற்குரிய வேலைத்திட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். கொவிட்-19 நெருக்கடியால் இழந்த விடயங்களை பிள்ளைகளுக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.
நாட்டில் உள்ள பத்து இலட்சம் பிள்ளைகளின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 comments: