நேற்றையதினம்(2020/11/20) விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேத்தாத்தீவை சேர்ந்த மயில்வாகன் சனுஸிகா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிக்குடியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக சிறுமிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் CT Scan செய்யப்படவில்லை.
அதனால் சிறுமி அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments