இன்னும் 24 மணிநேரத்தில் வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் சூறாவளி வலுவடையும் என்று வழிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியமாக உள்ளது. இது 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது.
0 comments: