Advertisement

Responsive Advertisement

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 18402ஆக அதிகரிப்பு- 69 பேர் உயிரிழப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் மூன்று உயிரிழப்புகள் நேற்று இரவு பதிவு செய்யப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவருர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 94 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முன்னதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடைய 92 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நேற்று மாத்திரம் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகியவற்றுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 564 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 377 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 489 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 746 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 6 இலட்சத்து 91 ஆயிரத்து 948 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments