Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 128ஆக அதிகரிப்பு!!

 


மட்டக்களப்பு நகரில்  இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும் முகக்கவசங்களை உரையாடல்களின் போது கட்டாயமாக பயன்படுத்துமாறும், பயணங்களின் போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின் போது சரியான வழிமுறைகளை பின்பெற்றுமாறும் சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் அவர் மேலும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments