Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த பல்கலைக்கழக மாணவன் கைது!

 


ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளான்.

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவன் ஒருவனே பரீட்சை கண்காணிப்பு குழுவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த மாணவன் கற்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த மாணவன் களணி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவித்த பொலிஸார், இவர் உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் தனது சக நண்பனுக்காக பரீட்சை எழுதி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த மாணவனை  இன்று(24) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments