Advertisement

Responsive Advertisement

வாழைச்சேனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட திட்டம்!

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதனையடுத்து பிரதேசத்தில் மக்கள் கூடும் பொது இடங்களில் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், ஓட்டமாவடி மீன் சந்தைப் பகுதி, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதான வீதிகள் என்பவற்றில் பொலிஸாரினால் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.ஜெயசுந்திரவின் வழிகாட்டலின் கீழ் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் தலைமையில் குறித்த சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கலகம் அடக்க பயன்படுத்தும் தண்ணீர் வீசும் இயந்திரத்தின் உதவியுடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இந்நடவடிக்கையில் வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கான கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் துரித நிலையில் தங்கள் கடமைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments