Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து.



இன்று அதிகாலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம்  பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.  மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை அதே வழிப்பாதையூடாக பயணித்துக்கொண்டிருந்த #கார் முந்திச்செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து சம்பவித்திருக்கின்து. கார் சாரதியினது அதிவேகமான வாகனச் செலுத்துகையே இவ் விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இவ் விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இவ் விபத்தின் போது காரினது முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பேருந்தினது பின் பகுதியும்



சேதமடைந்துள்ளது இவ் விபத்து சம்மந்தப்பட்ட மேலதிக விசாணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments