Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஓட்டமாவடி யில் பெண் ஒருவர் உயிரிழப்பு! வெளியான காரணம்

 


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயினால் பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதி மூன்றாம் குறுக்கில் வசிக்கும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் lll 

உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments