பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்செய்யப்பட்டுள்ள கம்பஹா மற்றும் நீர்கொழும்பில் உள்ள 19 பகுதிகளில் இன்று முதல் கண்டிப்பான ஊரடங்குச் சட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதான சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது அத்துடன் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் பேருந்துகள் அனுமதிக்கப்படாது.
கண்டி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கம்பஹா, யக்கல மற்றும் நிட்டாம்புவ காவல்துறை பகுதிகளிலும், நீர்கொழும்பு பிரதான சாலையில் உள்ள கந்தானை, சீதுவ மற்றும் ஜா-எல பகுதிகளிலும் இந்த சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஊரடங்கு உத்தரவு அமுல்செய்யப்பட்ட பகுதிகள் வழியாக நீண்ட தூர பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படும். இந்தநிலையில் பரீட்சைக்கு தோற்றிவரும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இந்தக்கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments: