மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக
காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று நண்பகல் வேளையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்னால், மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் - கல்முனையிலிருந்து மட்டக்களப்புத் திசை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த இருவரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: