Advertisement

Responsive Advertisement

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

 


நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கம்பஹாவிலிருந்து வெயங்கொட வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் எந்த ரயில்களையும் நிறுத்தாமல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கம்பஹா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் என்பதோடு வெயங்கொட ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தராலுவ, பெம்முல்ல, மாகலேகொட, ஹிந்தேனிய- பட்டியகொட மற்றும் வெயங்கொட ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரூவான் குணசேகர மக்களை கேட்டுள்ளார்.

Post a Comment

0 Comments