Advertisement

Responsive Advertisement

ஸ்ரீலங்காவில் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா! வெளியிடப்பட்டுள்ள தகவல்

 


கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பிரியந்த இலேபெரும உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் பெண் ஊழியர், இந்த மருத்துவரின் தனியார் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், குறித்த மருத்துவரை தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Post a Comment

0 Comments