Advertisement

Responsive Advertisement

ரிஷாட்டை மறைத்து வைத்திருந்த வைத்தியர் கைது!


 முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு குடியிருப்பில் மறைந்திருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை மறைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்களான வைத்தியர் மற்றும் அவரது மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை முன்னாள் அமைச்சரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகயிருப்பதற்கு உதவிய அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments