Home » » மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த நிலையிலும், ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 05 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |