Home » » மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை அமைதியான முறையில் நடைபெற்றது!

மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை அமைதியான முறையில் நடைபெற்றது!

 


(ரீ.எல்.ஜவ்பர்கான்)

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மட்டக்களப்பில் அமைதியான முறையில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

மட்டக்களப்பு மவட்டத்தில் இம்முறை 9748 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதற்கென 103 பரீட்சை நிலையங்களும் 13 இணைப்பு நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மாவட்ட பரீட்சை இணைப்பு நிலையம் தெரிவித்தது.

இம்மாவட்டத்தில் சகல பரீட்சை நிலையங்களிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர். கைகளை கழுவி சமுக இடைவெளி பேணப்பட்டு பரீட்சை மண்டபத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

முதன்முறையாக மாணவர்கள் தமது சுட்டெண்களை வெளியில் தெரியும் வண்ணம் ஒட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை நிலையங்களில் அதிகமான பொலிசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதுடன் பொதுச் சுகாதார அதிகாரிகளும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |