Advertisement

Responsive Advertisement

இலங்கையில் கொரோனா உயிர்ப்பலி 16 ஆக அதிகரித்தது

 


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவரும் இன்றிரவு மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொழும்பு, கொம்பனித் தெருவைச் சேர்ந்தவராவார்.

இதனால் இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு 16 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர், இரத்தத்தில் கிருமி நுழைந்தமை தொடர்பான சிக்கல் நிலை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை (23), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிக்கல் நிலைமை காரணமாகவே அவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments