Advertisement

Responsive Advertisement

கிழக்கில் தொடரும் கொரோனா அச்ச நிலை - மேலும் 12 தனிமைப்படுத்தும் இடங்கள்

 


கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் போது அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments