மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பெரிய அளவிலான வேலைத் திட்டமொன்று துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாத்துறை அமச்சின் செயலாளர் எஸ். கெட்டியாராச்சி சினிக்கிழமை 12.09.2020 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாமையமாக மாற்றியமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் ஒல்லாந்தர் கோட்டை உட்பட மட்டக்களப்பிலுள்ள சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை சுற்றுலாத்துறையினருக்கு ஏற்றவகையில் சகல வசதிகளையும் கொன்டமைந்ததாக மாற்றியமைப்பது பற்றி அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.
அத்தோடு மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா வருமானத்தை ஈட்டித் தரும் இடமாக மாற்றியமைப்பதோடு அதன் சரித்திரப் பழமை மாறாமல் பராமரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒல்லாந்தர் கோட்டையில் கலாச்சார விழிமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள் நூதனசாலை உட்பட பிரதேசத்தின் பண்பாட்டு பின்னணிகளை பிரதிபலிக்கின்ற ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான முதற்கட்ட வேலையாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனூடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறினர்.
மாவட்டத்தில் உன்னிச்சை தொப்பிக்கல்மலை பொண்டுகள்சேனை பனிச்சங்கேனி போன்ற சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் அவிபிருத்தி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொப்பிக்கல் மலையில் இயற்கைப் பூங்காக்களை அமைப்பது காட்டுவிலங்குகளை அவதானிக்க கூடிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு வாயில் மிதக்கும் படகு வீடுகளை அமைத்து அதில் சிற்றுன்டிச்சாலைகளை அமைப்பது போன்ற முன்மொழிவுகளும் கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்தன.
0 Comments