Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் நடைபெற்ற போக்குவரத்து பொலிஸாருக்கான விஷேட செயலமர்வு

 


லியோன்)

வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாடல் தொடர்பாக கிழக்கு மாகாண போக்குவரத்து பொலிஸாருக்கு தெளிவுபடுத்தும் பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி போக்குவரத்து நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியில் வாகன போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வாகன போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு வாகன போக்குவரத்து தொடர்பாக செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன

இதன் கீழ் கிழக்கு மாகாணத்தில் வீதி வாகன போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து பொலிஸாருக்கான வாகன போக்குவரத்து தொடர்பாடல் மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக தெளிவு படுத்தும் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஐ பி சரத் சந்திர ஒழுங்கமைப்பில் வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு உதவி பொலிஸ்மா அதிபர் டப்ளியு சுமித் நிஷங்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி பங்களிப்புடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பயிற்சி செயலமர்வு நடைபெற்றது .

இந்த பயிற்சி செயலமர்வில் கிழக்கு மாகாண வீதி வாகன போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் , வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.







Post a Comment

0 Comments