Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!!


 கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று(வியாழக்கிழமை) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 28 வயதான சுசிதரன் மற்றும் 27 வயதான தனுஷியா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆண் யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றி வந்த நிலையில், குறித்த பெண் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.



தனுஷியாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாக தெரிய வருகிறது.

இந்தநிலையில் இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments