Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊருக்குள் நுழைய முயன்ற யானை கூட்டம் விரட்டி அடிப்பு!

 

பாறுக் ஷிஹான்)

யானை கூட்டம் ஒன்று ஊருக்குள் பிரவேசிக்க முற்பட்டதை அடுத்து வனவிலங்கு அதிகாரிகள் அக்கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.

திடிரென அம்பாறை மாவட்டம் வீரச்சோலை காட்டின் ஊடாக கிட்டங்கி, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை எல்லை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 40 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை(14) மாலை,  இன்று(15) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன் விரட்டி செல்லப்பட்ட யானைகள் மீண்டும் காடுகளுக்குள் சென்றுள்ளன.

அண்மைக்காலமாக இப்பகுதியில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான யானைகள் இப்பகுதியில் வருகை தந்த வண்ணம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments