Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிள்ளையான் 20ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்

 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 20ம் திகதி தனது நாடாளுமன்ற முதல் அமர்வுக்கு கூடும் போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகநபராக இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான வழக்கு விசாரணைகள் 19ம் திகதி மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் கலந்துகொள்வதற்கு தேவையான ஒப்புதலை நீதிமன்றில் இருந்து பெறுவதற்கு அவரின் சட்டத்தரணி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments