Advertisement

Responsive Advertisement

புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

கிழக்கில் புகழ்பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை 05.07.2020ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10.07.2020ம் திகதி பிற்பகல் தீ மிதிப்பு வைபவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக, இவ்வருடன் அம்பாளின் உற்சவத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை இடம்பெறும் தீமிதிப்பு வைபவத்தில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ளமுடியா என்பதனை ஆலய நிருவாக சபையினர் மன வேதனையுடன் அறிவித்துள்ளனர்.

கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளும்முகமாக மக்களின் நன்மை கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஆலய நிருவாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இவ்வருடன் அம்பாளின் பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவண்ணம் அம்பாளை நினைத்து தரிசிக்குமாறும் கேட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments