Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்


தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. 
அறிக்கையின் விபரங்கள் வருமாறு

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இரண்டாம் வருட பயிலுனர்களின் 2017-2019 கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 07 ஆம் திகதி  முதல் ஜ{லை 31 ஆம் திகதி வரை நடைபெறும்

அனைத்து ஆசிரியர் கல்லூரிகளினதும் முதலாம் இரண்டாம் வருட ஆசிரியர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 07 ஆம் திகதி முதல் நடைபெறும்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மூன்றாம் வருட (2016-2018) மாணவர்களின்
வெளிவாரி பயிற்சி பூரணப்படுத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இணைத்தல் ஜூலை மாதம் 07 ஆம் திகதி முதல் ஜூலை 31 வரை நடைபெறும்.

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தேசிய கல்வியியற் கல்லூரிகளின் இரண்டாம் வருட மாணவர்கள் 2017 -2019 பாடசாலை பயிற்சிக்காக  பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவர் 

தேசிய கல்வியியற் கல்லூரிகளின் முதலாம் வருட மாணவர்கள் (2018-2020) கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

Post a Comment

0 Comments