Home » » மட்டக்களப்பில் இம்முறை இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள்

மட்டக்களப்பில் இம்முறை இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
மட்டக்களப்பில் இம்முறை பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளதாக மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இதற்கமைவாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மகாஜனக் கல்லூரி ஆகியவை பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாகவும் அமையப் பெறவுள்ளன.

இவற்றில் கல்குடா தேர்தல்; தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 15 வாக்கெண்ணும் நியைங்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 33 வாக்கெண்ணும் நிலையங்களும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 12 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால்மூல வாக்குளை எண்ணுவதற்காக 07 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மொத்தம் 67 வாக்கெண்ணும் பிரிவுகள் அந்தப் பிரதான வாக்கெண்ணும் இரு நிலையங்களிலும் இயங்கவுள்ளன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக 67 பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களும், 274 தெரிவத்தாட்;சி உதவி அலுவலர்களும், 449 சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களும், 620 வாக்கெண்ணும் கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 67 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 134 அலுவலக உதவியாளர்கள் அடங்கலாக 1611 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் வழங்கல், பொறுப்பபேற்றல் கடமைகளில் 70 தெரிவத்தாட்சி உதவி அலுவலர்களும், 120 சிரேஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களும், 140 கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 60 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 60 அலுவலக உதவியாளர்கள் உள்ளடங்கலாக 450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இம்முறை வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய ஆகஸ்ட் 06ஆந் திகதி காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |