Home » » பகைத்ததால் ஏற்பட்ட நிலை! கடும் அச்சத்தில் சீனா அதிபர்- வெடிக்கப் போகும் இராணுவ புரட்சி?

பகைத்ததால் ஏற்பட்ட நிலை! கடும் அச்சத்தில் சீனா அதிபர்- வெடிக்கப் போகும் இராணுவ புரட்சி?

சீனாவில் இராணுவ புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே லடாக் எல்லையில் கால்வான் பகுதியில் மோதல் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது.
கடந்த மாதம் 15-16-ஆம் திகதியில், நடந்த இந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர். இதை இந்தியா வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.
ஆனால், சீனா இதுவரை தங்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் சீனா தரப்பி 30-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சீன அதிபர் ஜிங்பிங் மெளனம் காத்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு நாட்டில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் கண்டிப்பாக இராணுவ புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரின் மகன் ஜியான்லி யாங் எச்சரித்துள்ளார்.
தற்போது அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக குரல் கொடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜியான்லி யாங் இந்தியா - சீனா பிரச்சினை குறித்து கூறுகையில், சீனாவின் அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்நாள் இராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது .
அவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய புரட்சியை செய்ய வாய்ப்புள்ளது என்பதால் ஜிங்பிங் அச்சத்தில் இருக்கிறார். சீனாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்பதை தெரிவிக்காமல் ஜிங்பிங் மறைத்து வருகிறார். இந்தியாவை விட அங்கு அதிக வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் அவர் உண்மையான எண்ணிக்கையை வெளியிட பயப்படுகிறார். தனது நாட்டில் புரட்சி வெடிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளார். அவரின் சைனீஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரே தற்போது ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள்.
சீனாவின் அரசில் இராணுவத்தின் பங்குதான் அதிகம். இராணுவத்திற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
இராணுவத்திற்கு எதிராக ஜிங்பிங் செயல்பட தொடங்கி உள்ளார். இது கண்டிப்பாக அவருக்கு நல்லது அல்ல. பிஎல்ஏ இராணுவத்தில் இருக்கும் பலர் ஏற்கனவே ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள்.
பல ஆயிரம் பேர் ஜிங்பிங் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்குவார்கள்
அதேபோல் சீனாவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசி வருகிறார்கள்.
இந்தியாவுடன் சீனா மோதியதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் இவர்கள் எல்லாம் ஜிங்பிங்கிற்கு எதிராக கலகம் செய்ய வாய்ப்புள்ளது. பிஎல்ஏ இராணுவத்தை பல காலமாக ஜிங்பிங் ஒடுக்கி வருகிறார். இப்போது அங்கு நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.
எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பதை கூட ஜிங்பிங் சொல்லவில்லை. மக்கள் எல்லோரும் கொதித்து போய் இருக்கிறார்கள்.
மொத்தம் சீனாவின் பிஎல்ஏ இராணுவத்தில் 5.7 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் ஆட்சியை, அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |