Home » » கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேரின் விபரங்கள் வெளியாகின

கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேரின் விபரங்கள் வெளியாகின

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 29 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், இராஜாங்கனை பிரதேசத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.

அத்துடன், சேனபுர புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 11 கைதிகளுக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய 14 பேருக்கும் தொற்றுறுதியானது.

இதற்கமையை, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 646 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஊடாக இதுவரையில் 506 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களுள் கைதிகள் 429 பேரும், உத்தியோகத்தர்கள் 47 பேரும், அவர்களுடன் தொடர்புடைய 30 பேரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக இராஜாங்கணையில் 1,3,5 ஆகிய பிரிவுகளில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இன்றைய தினம் அதிகாரிகள் உள்ளிட்ட எவரையும் வருகைதர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவரின் சகோதரரான பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், குறித்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசேதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேநேரம், முளங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு தொற்று உறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே , கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை 899 பேராக உயர்வடைந்துள்ளது.

மேலும் 9 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |