Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி! வெளியானது விசேட அறிக்கை

சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள இயல்பு நிலைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மத வழிபாட்டுத் தலங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்போது அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியும்.
இதேவேளை, சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களில் 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
குறித்த கல்வி நடவடிக்கைகளை ஜூன் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments