Home » » கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளும்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும் : பைசால் காசிம்.

கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளும்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும் : பைசால் காசிம்.



(நூருள் ஹுதா  உமர்)

இன்றைய சூழ்நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளும்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எங்களின் சமூகத்தில் இவ்வாறான அரசியல் செய்யும் நிலை இருக்காது என்று நம்புகிறேன். சமூகம் , சமூகம் சார்ந்த சிந்தனை, சமூகத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இளைஞர் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகத்தின் மிக சவாலான காலமாக எதிர்கால அரசியல் இருக்கும். இதை காப்பாற்ற எதிர்வரும் காலங்களில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து செல்வதே யோக்கியமானது என நினைக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், முன்னாள் சுகாதார துறை இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்.

செய்தி இணையதளம் ஒன்றின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் பேசிய  அவர்,

18 ஆம் திருத்த சட்டத்தில் ஆதரவு வழங்கவேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிர்பந்திக்கப்பட்டார். ஏனென்றால் எங்களின் கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக அவருக்கு அந்த முடிவை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கட்சியை காப்பாற்றவேண்டும் என்கின்ற நிலையில் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம்.

அமரர் தொண்டைமானின் அஞ்சலி நிகழ்வில் எங்களின் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் பிரதமர் மஹிந்த அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். சிறுபான்மை கட்சி என்றவகையில் ஆளும் கட்சியுடன் ஒத்துபோகவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு பிரச்சினை வருகின்ற போது வெளியில் இருந்து பேசுவதை விட ஆளும்தரப்பில் இருப்பது சௌகரியமான ஒரு விடயம். அதிலும் சில தடைகள் இருக்கிறது இல்லாமல் இல்லை.

 என்னை பொறுத்தமட்டில் அவ்வாறான ஒரு நிலை வந்தால் இன்றைய சூழ்நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளும்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எங்களின் சமூகத்தில் இவ்வாறான அரசியல் செய்யும் நிலை இருக்காது என்று நம்புகிறேன். சமூகம் , சமூகம் சார்ந்த சிந்தனை, சமூகத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இளைஞர் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகத்தின் மிக சவாலான காலமாக எதிர்கால அரசியல் இருக்கும். இதை காப்பாற்ற எதிர்வரும் காலங்களில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து செல்வதே யோக்கியமானது என்று நினைக்கிறேன். தேர்தல் எவ்வளவு அளவுக்கு பதில் சொல்லும் என்பது எனக்கு தெரியாது. 150 ஆசனங்ககளை பெறுவோம் என மொட்டு அணி இன்றைய நாட்களில் கூறிக்கொண்டாலும் 105- 110 ஆசனங்களையே அவர்கள் பெரும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

இருந்தாலும் கடந்த காலங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தேர்தல் காலங்களில் ஆளும் கட்சி தரப்பை எதிர்த்தும் பின்னர் அந்த அரசில் இணைந்து அமைச்சுக்களை பெறுவதும் வாடிக்கையான ஒன்றே. கட்சியின் முக்கியஸ்தர் தேர்தலுக்கு முன்னரே இவ்வாறு தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்திருக்கும் சூழ்நிலையில் இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் கடமை தலைவர், செயலாளர் நாயகம் போன்றோருக்கு உண்டு. மு.கா கட்சி ஆதரவாளர்களும் இது தொடர்பில் அதிருப்த்தி வெளியிடுகின்றனர். இது தொடர்பில் விளக்கம் அளிக்க யார் முன்வருவார் என்பதை காலமே பதில் சொல்ல வேண்டும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |