Advertisement

Responsive Advertisement

நீண்ட நாள் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி ஓட்டமாவடி - மாஞ்சோலை பகுதியில் கைது

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த நபர் ஓட்டமாவடி - மாஞ்சோலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடமிருந்து 1கிலோ 775 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments