Home » » பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரே நேரத்தில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், பௌத்த விகாரைகள், சைவ ஆலயங்கள், கத்தோலிக்க உட்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் கூடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சமூக மட்டத்தில் பரவில்லை என்பதை குறிப்பிடத்தக்க காலம் ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் சமய வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் 2001 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |